Idhayam Matrimony

ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த மாணவியின் கல்விச்செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி- கவிதா தம்பதியரின் மகள் ராஜேஸ்வரி, ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தந்தையை இழந்த நிலையில், சாதனை புரிந்த பழங்குடியின மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்! அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவது தான் ஐ.ஐ.டி.-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது தி.மு.க. அரசு தொடர்ந்து உழைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து