எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெனீவா: ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 18 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ள நிலையில், தற்போது இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதற்கான உறுப்பினர் நாடுகளின் வரிசையில், மற்ற நாடுகளுடன் இந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 18 நாடுகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இதற்கான பதவி காலம் தொடங்கும். இதனை ஐ.நா. பொது சபையின் 79-வது கூட்டத்தொடருக்கான தலைவர் பிலிமோன் யாங் தெரிவித்து இருக்கிறார். இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஜெர்மனி, சீனா, ரஷியா, உக்ரைன், ஈகுவேடார், குரோஷியா, பெரு, நார்வே உள்ளிட்ட நாடுகளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் இந்தியாவும் உறுப்பினர் நாடாகி உள்ளது. இதற்காக யாங் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது, நீடித்த வளர்ச்சியை நவீனப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்களை பற்றி பேசுவது என உங்களுடைய பணிகள், அனைவருக்கும் ஒளி நிறைந்த எதிர்காலம் உருவாக வழியேற்படுத்தும் என யாங் தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


