Idhayam Matrimony

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கார் வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் பலி

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      இந்தியா
Accident-1

Source: provided

நாசிக்: சாலையோரம் உள்ள வீட்டுக்குள் கார் புகுந்ததையோட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு வீட்டினுள் வேகமாக சென்ற கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு கல்வான் தாலுகாவில் உள்ள கோலாப்பூர் பாட்டாவில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலத்தின் சாட்டனாவில் உள்ள நாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நாசிக்கில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, தங்களின் வீட்டிற்கு திரும்பும் போது, அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நாசிக்-கல்வான் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் உள்பட 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்கள் ஷாய்லா வசந்த பதன் 62, அவரது மகள் மாதவி மேத்கர் 32, அவரது பேத்தி திரிவேனி மேத்கர் 4, அவரது உறவினர் சர்லா பாலசந்திர பதன் 50, டிரைவர் கலிஹ் மஹமூத் பதன் 50, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேத்கரின் 12 வயது மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் மகனும் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர்களது உறவினர் பாலசந்தர பதன் 52, பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து