முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      சினிமா
Dom 2025-06-06

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின், அதிரடியான சண்டைக் காட்சிகளினாலே உலகளவில், மிஷன்: இம்பாஸிபிள் திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்தப் படங்களுக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் பட வரிசையில் 8வது பாகம் வெளியாகி சர்வதேச அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையிலும் டாம் க்ரூஸ் இடம்பிடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனான அவர், தீயில் எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், சுமார் 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்தப் பிரத்யேக சண்டைக் காட்சியை, தென் ஆப்பிரிக்கா நாட்டின் டிராகென்ஸ்பெர்க் நகரத்தில் படம் பிடித்துள்ளனர். சுமார் 75,000 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டின் மூலம் குதித்து, அதன் கயிறுகளை அறுத்து, மற்றொரு பாராசூட்டின் மூலம் தப்பிக்கும் படியான ஸ்டண்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் பாலிவுட் திரைப்படங்களைப் போன்று பாடல்களுடன் கூடிய படத்தை உருவாக்க நடிகர் டாம் க்ரூஸ் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து