எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், "காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இங்கிலாந்து அளித்த ஆதரவுக்கும் நன்றி.
பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். மேலும், எங்கள் நட்பு நாடுகள் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தீமை செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக நிறுத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று தெரிவித்தார்.
மேலும் அவர், சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு ஆகியவை உண்மையிலேயே ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினையை இந்தியத் தரப்பு எழுப்பியதாகத் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


