Idhayam Matrimony

நடப்போம் நலம் பெறுவோம் 2.0: முதல்வர் மு.க.ஸ்டலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
Ma Supra 2025-06-07

Source: provided

சேலம் : தமிழ்நாடு முதல்வரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன் பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார். 

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வருவாய் மாவட்டங்கள் 38 மாவட்டத்திலும் இந்த ஹெல்த் வாக் ஸ்கீம் 8 கி.மீட்டர் தூரம் அடையாளம் காணப்பட்டு இரு மருங்கிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கைள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதல்வர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே 700-க்கும் மேற்பட்டோர் நடப்போர் நல சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது நாமக்கல் தான் முதலிடமாக இருக்கும் என்று கருதுகிறேன்.  சாலைகளை பசுமை பகுதியாக மாற்ற ஆயிரக்கணக்கான மரங்களை குறிப்பாக நாட்டு மரங்களான புங்கை மரம், பூவரசு மரம், அத்தி மரம், நாவல் மரம், வேப்ப மரங்களை நடவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அந்த வகையில் இந்த ஹெல்த் வாக் சாலை மிக சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பவர்களும் மிக சிறப்பாக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து