எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நார்த்தம்டான் : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி 348 ரன்கள் குவித்தது.
டெஸ்ட் தொடர்...
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்திய ஏ அணி அங்கு சென்று, இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி டிராவில் முடிந்தது.
நார்த்தம்டானில்...
இதனையடுத்து இந்தியா ஏ-இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நார்த்தம்டானில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்திருந்தது. அன்ஷுல் கம்போஜ் ஒரு ரன்னுடனும், தனுஷ் கோட்டியான் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அபாரமாக விளையாடி சதமடித்த கே.எல்.ராகுல் 116 ரன்களில் கேட்ச் ஆனார். துருவ் ஜுரெல் 52 ரன்களிலும், கருண் நாயர் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
348 ரன்கள்...
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா மேற்கொண்டு 32 ரன்கள் அடிப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா ஏ 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


