Idhayam Matrimony

ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒரேநாளில் அதிகபட்சமாக 144 பேருக்கு பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 1,950 பேர் சிகிச்சை  பெற்று வருகிறார்கள்.

ஒரே நாளில் நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 144 பேருக்கு பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 1950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத் மாநிலத்தில் புதிதாக 105 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் , அங்கு 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்குவங்கத்தில் புதிதாக 71 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 753 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவில் புதிதாக 3 பேரும், கர்நாடகத்தில் இருவர் மற்றும் தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து