Idhayam Matrimony

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது: அமெரிக்காவில் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      உலகம்
USA 2025-06-08

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து அதிபர் டிரம்ப் நாடுகடத்தி வருகிறார். அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: கலிபோர்னியாவின் கவர்னர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸால் தங்கள் வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், அது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்ப்போம். கலவரங்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு அவர்கள் வழியில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து