Idhayam Matrimony

தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      விளையாட்டு
INDIA 2025-06-08

Source: provided

சீன தைபே : தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் தொடங்கியது.  முதல் நாளில் இந்திய அணி 6 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

ஜோதி யர்ராஜி தங்கம்...

நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2-வது மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர்.

வீராங்கனைகள் அசத்தல்...

பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனயாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.

6 தங்கம்... 

ஆண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜஸ் சிர்சே தங்கம் வென்றார். தைவான் தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 தங்கம் வென்று அசத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து