Idhayam Matrimony

பா.ஜ.வின் 11 ஆண்டு கால ஆட்சி அர்ப்பணிப்புகளின் பொற்காலம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு நேற்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பா.ஜ., அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொற்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவி காலத்தில், இந்தியா சீரமைப்பு, செயல்திறன் உள்ளிட்டவற்றால், வளர்ச்சி மற்றும் சுயசார்பு பாதையில் வேகமாக முன்னேறுகிறது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியானது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று சொல்லலாம்.

பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில், புதிய அத்தியாயத்தை இந்த நாடு கண்டு வருகிறது. 'குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்' என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சியின் வேகமும், அளவும் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு, ஆட்சியை நடத்தி வருகிறார், இவ்வாறு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து