Idhayam Matrimony

அரசு இல்லத்தின் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலாளி கைது

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Jail-1

Source: provided

தாம்பரம் : தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படித்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு சேவை மைய காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சேவை இல்லத்தில் சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சேவை இல்லத்தில் இருந்து எழுந்து வரும்போது மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி மயக்கம் அடைய செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதோடு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த மாணவிகள் மற்றும் பாதுகாவலர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எட்டாம் வகுப்பு மாணவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அரசு சேவை இல்லத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சேவை இல்லத்தில் புகுந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து சிட்லபாக்கம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த அரசு சேவை மைய காவலாளி மேத்யூ (49) என்பவர் தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து