எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சென்னை, பெங்களூரு மைதானங்களில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் மாற்றபடுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
மைதான மாற்றங்கள்...
இந்திய ஆண்கள், மகளிர் மற்றும் ஏ கிரிக்கெட் அணிகள் உள்ளூரில் விளையாட உள்ள போட்டிகளுக்கான மைதான மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி (2-வது டெஸ்ட்) அக்டோபர் 10-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருந்தது. ஆனால் அந்த போட்டி தற்போது புதுடெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சண்டிகருக்கு...
அத்துடன் நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் தொடங்க இருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் இந்த 3 போட்டிகளும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதல் 2 போட்டிகள் சண்டிகருக்கும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதுடெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ராஜ்கோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


