எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "அரசியலமைப்பு ரீதியாக மக்களவை துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகர் தேர்வுக்கான நடைமுறையைப் போன்றதே. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பவர் சபாநாயகர் என்பது மட்டுமே. முதல் மக்களவை முதல் பதினாறாவது மக்களவை வரை, ஒவ்வொரு சபைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களில் இருந்து துணை சபாநாயகரை நியமிப்பது மரபு.
எனினும், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, இந்தப் பதவி கடந்த 17-வது மக்களவையிலும், தற்போதைய 18-வது மக்களவையிலும் காலியாகவே உள்ளது. இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, கூடிய விரைவில், புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


