முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      அரசியல்
Ramadoss 2023-07-28

சென்னை, தைலாபுரம் தோட்டத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர். இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து