முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு: காசாவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      உலகம்
Gun 2023-10-05

Source: provided

காசா முனை: காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காசாவின் ரபாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. நிவாரண பொருட்களை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல்களும் காசாவில் செயல்பட்டு வருகிறது. அதேவேளை, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது இஸ்ரேல் படையினரா? ஹமாஸ் ஆயுதக்குழுவினரா? கொள்ளை கும்பலா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து