Idhayam Matrimony

இங்கி. பார்லிமெண்ட்டில் கெளரவம்: பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து

புதன்கிழமை, 11 ஜூன் 2025      தமிழகம்
Anbil 1

Source: provided

சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள சென்னை ஆசிரியை கனக லட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது., சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ளார். கனகலட்சுமி அவர்கள் தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். 

தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியினைத் தொண்டாக கருதி பணியாற்றி வருகிறார். இப்பணியினைப் பாராட்டி க்ராய்டன் தமிழ் சங்கம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இவரை கெளரவிக்க உள்ளது.  தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியை கனகலட்சுமிக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து