எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : புகார்ப்பெட்டிகளின் சாவியை தொலைத்து விட்டாரா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு., 2019-ல் நான் முதலமைச்சராக இருந்தபோது, ‘முதலமைச்சரின் சிறப்புகுறை தீர்க்கும் திட்டத்தின்’ மூலம் நானும், அமைச்சர்களும் தமிழகம் முழுவதும்சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, சுமார் 5,08,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் ஸ்டாலின். இன்று வரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன? அந்தக் கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளி விவரங்களை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை.
அந்தப் பெட்டிகளின் சாவிகளை ஸ்டாலின் தொலைத்துவிட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக் கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து என்னை முதலமைச்சர் அறையிலேயே சந்திக்கலாம் என்று பசப்பு வார்த்தை பேசினார். இதுவரை ஒருவர்கூட ஒப்புகைச் சீட்டோடு சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்தித்ததாகத் தெரியவில்லை.
ஒருசில மாதங்களுக்கு முன்பு காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே, தனதுபெண் குழந்தையுடன் கோட்டைக்குச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கமுடியவில்லை என்று பேட்டி அளித்ததை அனைத்து ஊடகங்களிலும் பார்த்தோம்இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


