Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபருக்கு ஜாமீன் மறுப்பு

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
Cort 2023 04 17

Source: provided

ஹிசார்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது அம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.

கடந்த மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்ட அவர், என்.ஐ.ஏ. மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளால் தீவிரமாக விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்றக்காவலை வருகிற 23-ந்தேதி வரை கோர்ட்டு நீட்டித்து உள்ளது. இதற்கிடையே ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் கேட்டு ஹிசார் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சுனில் குமார் நேற்று முன்தினம் விசாரித்தார்.

அப்போது ஜோதிக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் இடையில் அவரை ஜாமீனில் விடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் காணொலி மூலம் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து