முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      உலகம்
Fire

Source: provided

ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய் பகுதியில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு முதல் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அம்மாகாணத்தின் ஹூத் ஆற்றுக்கும், டல்லஸ் நகரத்துக்கும் இடையிலான 84-ம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிப்பதால் சுமார் 32 கி.மீ. நீளமுடைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் மூலம் அங்கு பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க, அமெரிக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வடமேற்கு டல்லாஸ் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 1,352 குடும்பங்கள் வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளியேற்றப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக, டல்லாஸ் நகரத்தின் நடுநிலைப் பள்ளி உள்பட இருவேறு இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வாஷிங்டன் நகரத்தில், கொலம்பியா ஆற்றின் அருகில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், சுமார் 13 கி.மீ. நீளமுள்ள 14-ம் மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து