Idhayam Matrimony

தன்னை தனித்துவமாக காட்டிக்கொண்டவர் ரூபானி : பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

அகமதாபாத் : தனக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பணியிலும் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டிக் கொண்டார் என விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி  குறித்து பிரதமர் நரேந்திர மோடி  தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி விஜய் ரூபானியின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், விஜய் ரூபானியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், "விஜய் ரூபானிஜியின் குடும்பத்தினரை சந்தித்தேன். விஜய் ரூபானி நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் அவரை பல பத்தாண்டுகளாக அறிவேன். மிகவும் சவாலான சில காலகட்டங்கள் உட்பட, நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றி உள்ளோம்.

விஜய் ரூபானி பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியானவராகவும் இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத்தின் முதலமைச்சராக விடாமுயற்சியுடன் பணியாற்றியவர் அவர். தனக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பணியிலும் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டிக் கொண்டார்.

இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து