Idhayam Matrimony

அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

Source: provided

அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று  புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், 6 பேரின் முகம் அப்படியே இருந்ததால், அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதே பரிசோதனை நடைமுறைகளை கையாளும் ஆய்வாளர் சிராக் கோசாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "வியாழக்கிழமை விபத்துக்குப் பிறகு குறைந்தது 265 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், ஆறு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த டி.என்.ஏ. விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இறந்த 215 பேரின் உறவினர்கள் தங்கள் மாதிரிகளை வழங்க எங்களை அணுகியுள்ளனர்.  டி.என்.ஏ மாதிரிகளைப் பொருத்தும் பணியை முடிக்க கிட்டத்தட்ட 72 மணிநேரம் ஆகும். பொருத்தம் ஏற்பட்டவுடன், உடல்கள் பிரேத பரிசோதனை அறையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 விமானப் பயணிகள் உயிரிழந்தனர். அதோடு, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து