எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடி நலம் விசாரித்துவிட்டுச் சென்ற பிறகு விஷ்வாஸ், பேட்டி அளித்தார். “விமானம் புறப்பட்ட பிறகு, 5-10 வினாடிகளில் அனைத்தும் சிக்கிக் கொண்டது போல் நாங்கள் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நான் நினைத்தேன். அது கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது.
நான் அமர்ந்திருந்த இடம் விமானம் மோதிய விடுதி பக்கத்தில் இல்லை. சிறிது இடம் இருந்தது. என் கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன், பின்னர் நான் வெளியேற முயற்சித்தேன், நான் வெளியே வந்தேன். நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை” என விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


