எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் பாலிசி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான
குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபி-யின் நேர்காணலைப் பகிர்கிறேன்.என்சிஆர்பி தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.
அதேநேரம், போக்சோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் பாலிசி,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


