Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்தால் பதற்றமாக உள்ளது : இந்திய அணி பயிற்சியாளர் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நினைத்து சிறிது பதற்றமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

லீட்ஸில்...

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

பதற்றமாக...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி போதிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், இங்கிலாந்துக்கு எதிராக எப்படி செயல்படப் போகிறார்கள் என்பது குறித்து சிறிது பதற்றமாக இருக்கிறேன் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

தீவிர பயிற்சி... 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சு தெரிவுகள் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறந்த திறமைகளைக் கொண்டுள்ளனர். கடந்த சில நாள்களாக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

நம்பிக்கையுடன்...

இருப்பினும், குறைந்த அளவிலான சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடியுள்ளதால் சிறிது பதற்றமாகவும் இருக்கிறது. இளம் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். ஒரு அணியாக வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து