எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கடன் வசூல் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட 2 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உயிரி மருத்துவக்கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) பொது இடங்களில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் நி்றைவடைந்தது. இந்த பேரவையில் கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.
அதன்படி, 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால், 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளை பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த மசோதா மீது கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இறுதியில், தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்ட மசோதா உள்ளிட்ட 18 சட்ட மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


