Idhayam Matrimony

குஜராத் விமான விபத்தில் 2 விமான பணிப்பெண்கள் உள்பட 10 ஊழியர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
Gujarat 2025-06-13

Source: provided

குஜராத் : குஜராத் விமான விபத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

விபத்தில் இரண்டு விமானிகள், 10 பணியாளர்களும் உயிரிழந்தனர். மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமான பணிப்பெண்கள் இதில் அடங்குவார்கள். அதில் ஒருவர் லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார். மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவருடைய ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளது.

லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர். தனது தாயாரிடம் லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என  பேசியுள்ளார். அதன்பின்தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார், சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் கிப்ஜென் தெரிவித்துள்ளார். விமானப் பணிப்பெண்ணின் தாயாராக்கு போன் செய்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து