எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாட்கள் தடைக்காலம் நேற்று (சனிக்கிழமை)நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகியுள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்படும். நிகழாண்டும் தடைக்காலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைவதையொட்டி, தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 800 விசைப்படகுகள் உள்ளன. தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு வார பயணத்திற்கான மளிகை சாமான்கள், உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கி படகுகளில் ஏற்றும் பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


