முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானிய சர்வாதிகாரி தனது மக்களை அவர்கள் விரும்பாத ஒரு யதார்த்தத்துக்கு பிணைக் கைதிகளாக வைத்துள்ளார். இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்கள் பெரும் விலை கொடுப்பார்கள். அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நோக்கி மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று கூறினார்.

ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களைப் பயன்படுத்தும் அதேவேளையில், ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஈரான் பதிலடி கொடுத்ததால், வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கோலான் ஹைட்ஸ் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன. பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

ஈரானின் அணுசக்தி தளங்​கள், ராணுவ தளங்​கள் மற்​றும் அணுசக்தி விஞ்​ஞானிகள், ராணுவ தளப​தி​களின் இருப்​பிடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் விமானப்​படை நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 200-க்கும் மேற்​பட்ட போர் விமானங்​கள், நூற்​றுக்​கணக்​கான ட்ரோன்​கள் மூலம் ஈரான் முழுவதும் குண்​டு​கள் வீசப்​பட்டன. ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃப​கான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்​நுட்ப மையம், மர்​காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகிய​வை​யும் இஸ்ரேலின் தாக்​குதலில் தகர்த்து அழிக்​கப்​பட்​டன. இந்த தாக்​குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்​ஞானிகள் அப்​துல் ஹமீது, அகமதுர​சா, சையது அமீர்​ உசைன், மோட்​லாபி​சாடே, முகமது மெஹ​தி, அப்​பாஸி ஆகிய 6 பேர் உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்​டத்​துக்கு பெரும் பின்​னடை​வாக அமைந்​துள்ளது.

இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள ராணுவ குடி​யிருப்​பு​கள் மீது ட்ரோன்​கள் துல்லிய தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்​லாமிக் புரட்சி காவல் படை​யின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்​பியா என்ற ஈரான் போர் கட்​டளை தலை​மையகத்​தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயி​ரிழந்​தனர். 

இதுகுறித்து பேசிய ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேல் தாங்கள் தாக்கியதால் அது முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. அதுபோல இல்லை. அவர்கள் இதைத் தொடங்கி போரைத் தொடங்கினர். அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்திலிருந்து அவர்கள் காயமடையாமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினார். மேலும், ஈரானிய தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலுக்கு உதவினால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சின் தளங்கள் மற்றும் கப்பல்களைத் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து