எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர்.
அப்போது, அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டுபூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி விட்டார். இதனிடையே சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி இருவரும் நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
இந்த வழக்கு விசாரணையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். விசாரணைக்கு தனியாக வர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யவா உங்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டநிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


