Idhayam Matrimony

தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

புதன்கிழமை, 18 ஜூன் 2025      விளையாட்டு
South-Africa 2025-06-17

Source: provided

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் இன்னின்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரிஸ்டன் பிரிட்ஸ் 101 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபி ப்ளெட்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு 39 ஓவர்களில் 288 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 121 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 166 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. 

________________________________________________________________________________________________________________

தொடரை வெல்வோம் - ஷர்துல் 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, வித்தியாசமான சவால்களை அளிக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடவுள்ளது மிகவும் உற்சாகமாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கேற்றவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அணியில் புதிய ஆற்றல் இருப்பது நல்ல விஷயம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அணியில் திறமையான இளம் வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகமளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள். வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்றுவது எப்போதும் சிறப்பான விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரைக் கைப்பற்றினால், அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

________________________________________________________________________________________________________________

அஸ்வினின் டிரெய்லர் வெளியீடு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.  இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று சிஎஸ்கே யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று IPL, TNPL போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________________________________________

முஷ்ஃபிகுர் ரஹிம் சாதனை

வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் கில்கிறிஸ்டை முந்தி அதிக ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 423/4 ரன்கள் குவித்துள்ளது. மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 159 என்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.இத்துடன் டெஸ்ட்டில் 6,214 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7795 ரன்கள், டி20யில் 1500 ரன்கள் என மொத்தமாக 15,509 சர்வதேச ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஒரேயொரு பந்துகூட வீசாமல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,509 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக ஆஸி.யின் ஆடம் கில்கிறிஸ்ட் 15,461 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருப்பவர்கள் 1. முஷ்ஃபிகுர் ரஹிம் - 15, 509, 2. ஆடம் கில்கிறிஸ்ட் - 15, 461, 3. குவிண்டன் டி காக் - 12, 654. இந்தியாவின் எம்.எஸ்.தோனி அதிக ரன்கள் அடித்திருந்தாலும் அவர் பந்துவீசி இருப்பதால் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து