முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் மீது உலக நாடுகள் அதிக நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      தமிழகம்
CM-1-2025-06-19

சென்னை, திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி வளாகம் அமைத்துள்ளோம். 2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழகம்.

தொழில் வளர்ச்சி, தொழில் துறையினர், தொழிலாளர் நலனுக்கு என்னவெல்லாம் தேவை என உன்னிப்பாக கவனித்து செயல்படுகிறோம். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் பங்கு 11.9 சதவீதம் ஆக உள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது. 

பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு. தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. தமிழகத்தின் மீதும் சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்த மதிப்பின் வெளிப்பாட்டால் கண்காட்சியில் பங்கேற்பபோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்தாண்டு நடந்த கண்காட்சியில் 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

தி.மு.க., ஆட்சியில் 14 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். தமிழகம் மீது உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது மின்சாரம். தொழில் நிறுவனங்களுக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில், ரூ.3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் தான் ஒதுக்கினார்கள்.

தற்போது தி,மு.க., ஆட்சியில், 2 மடங்கு அதிகமாக, இதுவரைக்கும் ரூ.6 ஆயிரத்தி 626 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம். தமிழகத்தை இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். 2024-25ம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்து, இந்திய அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளோம்.

தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு தி.மு.க. அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளது. எம்.எஸ்.எம்.இ.-க்கு என தனிப்பட்ட பாலிசி, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என ரூ.1000 கோடிக்கு மேல் மானியம் தரப்பட்டது. தொடர்ந்து ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நேற்று தொடங்கிய சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி வருகிற 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து