எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மே13 - கலைஞர் டி.வி. நிர்வாகத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற கனி மொழியின் வாதத்தை பொய்யாக்கும் விதத்தில் கலைஞர் டி.வி. நிர்வாக விவகாரங்களில் கனிமொழிக்கு ஈடுபாடு உள்ளது என்று அவரது உறவினர்களில் ஒருவரான பி.அமிர்தம் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கான 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இதை அடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் இந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா, சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் ராசாவின் அப்போதைய உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோர் உள்பட மேலும் 8 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடியை அளித்துள்ளது. ஆனால் இந்த பணத்தை தாங்கள் அதே கம்பெனியிடம் திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. தெரிவித்துள்ளது. என்றாலும் இந்த ரூ.200 கோடி எதற்காக கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஊழல் வழக்கில் சி.பி.ஐ.தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ( நிர்வாக இயக்குனர் ) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதை அடுத்து இவர்கள் இருவரும் டெல்லியில் பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கலைஞர் டி.வி. நிர்வாக விஷயங்களில் கனிமொழிக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று அவரது சார்பில் வாதாடிய பிரபல வக்கீல் ராம்ஜேத் மலானி வாதாடினார்.
ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் கனிமொழியின் உறவினரான பி.அமிர்தம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவர் கலைஞர் டி.வி.யில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியவர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி ( அக்காள் ) பெரிய நாயகத்தின் மூத்த மகன்தான் இந்த பி.அமிர்தம்.
குற்றவியல் சட்டம் ( சி.ஆர்.பி.சி. ) பிரிவு 161 ன் கீழ் இந்த வாக்குமூலத்தை சி.பி.ஐ.யிடம் அமிர்தம் சமர்ப்பித்துள்ளார்.
கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் கனிமொழி தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட் என்ற இந்த நிறுவனத்தை தோற்றுவித்த இயக்குனர்களில் கனிமொழியும் ஒருவர் என்று அமிர்தம் கூறியுள்ளார். இருந்தாலும் கடந்த 2007, ஜூன் 20 ம் தேதி இயக்குனர்கள் குழுவில் இருந்து கனிமொழி விலகி விட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரவேண்டிய அனுமதிகள் காலதாமதமானதால் கனி மொழி தனது இயக்குனர் பதவியிலிருந்து விலகினார். எனினும், கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் அவர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார் என்றும் அமிர்தம் கூறியுள்ளார்.
குற்றவியல் நடைமுறை விதி ( சி.ஆர்.பி.சி. ) எண் 161 ன் கீழ் ஒரு போலீஸ் அதிகாரியின் சாட்சியம் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே கனிமொழிக்கு கலைஞர் டி.வி. யில் ஈடுபாடு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக பிற சாட்சியங்களை சி.பி.ஐ. தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்தே அமிர்தத்திடமிருந்து இந்த சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயம் பெற்ற டி.பி. குழும கம்பெனியிடமிருந்து ரூ.200 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது. இதை கனிமொழியும் சரத் குமாரும் பெற்றுக்கொண்டனர். அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா காட்டிய சாதகமான சலுகைகளின்படி இந்த ஒதுக்கீடுகளை டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஸ்வான் டெலிகாம் பெற்றுள்ளது. எனவேதான் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலமாக ரூ. 200 கோடி 2008 - 09 ம் ஆண்டில் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளது என்று ஏற்கனவே சி.பி.ஐ.அதிகாரிகள் டெல்லி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்திற்கு சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் இருந்து உத்தரவாதமில்லா கடனாக ரூ. 200 கோடியை கலைஞர் டி.வி.பெற்றுள்ளது. ஆனால் உண்மையில், கலைஞர் டி.வி.யில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை விலைக்கு வாங்கவே இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது என்று அமிர்தம் கூறியுள்ளார்.
என்றாலும் இந்த ரூ. 200 கோடி கடன் வட்டியுடன் திருப்பி அதே கம்பெனிக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டது என்றும் சி.பி.ஐ.யிடம் அமிர்தம் கூறியுள்ளார்.
கலைஞர் டி.வி.யில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், சரத்குமாருக்கு (நிர்வாக இயக்குனர்)20 சதவீத பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
நியூயார்க் : அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02 Jul 2025அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு சம்பம்: இந்தியா கண்டனம்
-
வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினம்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள்
02 Jul 2025பர்மிங்காம் : வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினத்தை முன்னிட்டு 2-வது டெஸ்டி போட்டியிலும் இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமெரிக்க அரசு முடிவு
02 Jul 2025நியூயார்க், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
-
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆறுதல்
02 Jul 2025சிவகங்கை : போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்றார். அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தி
-
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
02 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
-
2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் நீக்கம் ஏன்..? - கேப்டன் சுப்மன் கில் பதில்
02 Jul 2025பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ரா, குல்தீப் இடம் பெறாதது குறித்து கேப்டன்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.