Idhayam Matrimony

விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      சினிமா
Penix 2025-06-30

Source: provided

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ். பிரபல சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூலை 4 அன்று திரைக்கு வரும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில், 2019 ல் எனக்கு அனல் அரசு அவர்கள் ஒரு கதை சொன்னார், ஆனால் அப்போது பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். என்றார். இயக்குநர் அனல் அரசு பேசுகையில், “இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம் சண்டை பயிற்சி இயக்குனராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குனராக என்னுடைய முதல் படம் இது. அனைவரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து