முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் பயணமாக டெல்லி  புறப்பட்டு சென்றார்.

தமிழக அரசுக்கும், கவர்னர் கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லிக்கு ஒரு நாள் பயணமாக சென்று வந்த கவர்னர் ஆர்.என். ரவி, தற்போது 4 நாள் பயணமாக மீண்டும் டெல்லி சென்றுள்ளார்.

நேற்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஒரே வாரத்தில், 2-வது முறையாக கவர்னர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் பயணத்தில் அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் தெரிவிப்பார் என தெரிகிறது. அதனை தொடர்ந்து வரும் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் இருந்து சென்னை திரும்ப இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து