Idhayam Matrimony

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்      விளையாட்டு
Udhayanidhi-Stalin-2025-07-

சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்தார்.  

இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் பந்தயத்தில் 6 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, ஹோலி கிராஸ் ஆங்கில இன்டியன் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி. மாணவி "அன்விதா சிவக்குமார்" 5 வயது ஐ.பி.என். அகடமி சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். மேலும் அந்த மாணவி 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தமிழக விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தமிழக அரசு விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளும் ஊக்கமும் ஆக்கமுமே தூத்துக்குடியைச் சேர்ந்த 5 வயது சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மன தைரியத்துடன் கலந்து கொண்டு சாதனை படைக்க முடிந்துள்ளது. அந்த சாதனையை பெற்ற மாணவியை சென்னைக்கு வரவழைத்து பசுமை வழி சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது திறமையின் மூலமாக சாதனைகள் பல தொடர வேண்டும், வெற்றிகள் குவிய வேண்டும் என்றும் மாணவியிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து