முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறும்   கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- தமிழ்க் கடவுள் முருகனுக்கு இந்த ஆட்சியில் தொண்டு செய்வதற்கு கிடைத்த வாய்ப்பைப் போல் இதுவரையில் வேறு எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை.  முருகனுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருகின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்திருக்கின்றது. அந்த வகையில் பழனி  கோவில் இன்றைக்கு திருப்பதி போல் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.  திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி  கோவிலுக்கு வருகின்ற 14.7.2025 குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு வருகின்ற 7-ம் தேதி நடைபெற இருக்கின்றது. அதில் லட்சோப லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து, இது இந்த ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம்.

மக்களை நோக்கி விஜய்யின் பயணத்தை தொடங்க சொல்லுங்கள். அவர் பயணத்தையே செப்டம்பர் மாதத்திற்கு மேல் தான் தொடங்குவேன் என்று சொல்கிறார்.  காத்திருந்த தொண்டர்களை கூட பார்க்க முடியாமல் இருந்த செய்தி ஊடகங்களில் வந்தது. ஆகவே அவர், முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கின்ற இயக்கத்தையும் பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். மக்களை பாதுகாக்க எங்களுடைய மக்களின் முதல்வர் இருக்கின்றார். விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அறையில் அமர்ந்து கொண்டு அறைகூவல் விடுவதை முதல்-அமைச்சர் எளிதாக தனது லெப்ட் ஹேண்டில் கையாண்டு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து