Idhayam Matrimony

வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Eps 024-12-03

சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதி.மு.க. தலைமை அலுவலகத்தில், சுற்றுப்பயணத்துக்கான பாடல், லோகோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘ கடந்த 10 ஆண்டுகால அதி.மு.க. ஆட்சியில்  தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.

இப்போது நடக்கும் தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவே எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன்.

2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அதற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக இந்த சுற்றுப்பயணம் அமையும்.  

எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளன. அப்போது மேலும் பலம் வாய்ந்த கூட்டணியாக எங்கள் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து விஜய் எடுத்துள்ள முடிவு அவரின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். தி.மு.க. ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து