முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      இந்தியா
Accident-1

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. காரில் திருமண விழாவிற்கு மணமகன் உட்பட ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது.

கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்தது. திருமண விழாவிற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்து மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து