Idhayam Matrimony

கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      இந்தியா
Raini-2024-05-20

சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்துவருகின்றது. மேக வெடிப்புகளால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காங்க்ரா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், சம்பா, சோலன், சிம்லா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை எச்சரித்துள்ளது. ஜூலை 5 முதல் 9 வரை மாநிலத்தில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டியின் சிம்லா மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்தது, அதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அகார் மாவட்டத்தில் 7 செ.மீ, அதைத் தொடர்ந்து, சாராஹான் மற்றும் சிம்லாவில் தலா 4 செ.மீ, மழைப் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து