Idhayam Matrimony

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

சென்னை: அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.

கோவையில்ம் காலை 9 மணியளவில் மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து பேசவுள்ளார். அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார். இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார். மேற்குறிப்பிட்ட 5 இடங்களிலும் மக்களைச் சந்தித்து, பிரசார வாகனத்தில் இருந்தவாறே எடப்பாடி பழனிசாமி உரையாற்றவுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் பரப்புரையை தொடங்கும் இபிஎஸ் ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து