முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீனிக்ஸ் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      சினிமா
Pinikx-Review 2025-07-07

Source: provided

அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை. பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் எம்.எல்.ஏ-வை, வெட்டி கொலை செய்கிறார் நாயகன் சூர்யா சேதுபதி. அவரை கைது செய்யும் போலீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறது. கணவரை கொலை செய்த சூர்யாவை கொலை செய்ய எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி திட்டமிட, அவரது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா சேதுபதி.  மீண்டும் அடுத்தடுத்த திட்டம் அரங்கேறுகிறது, ஆனால் அவற்றில் இருந்து எப்படி தப்பித்து தன்னை  வீழானாக நிரூபிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் சூர்யா சேதுபதி, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அதிரடி காட்சிகளில் மிரட்டுகிறார். அதே போல் சம்பத் ராஜ், வரலட்சுமி, தேவதர்ஷினி, விக்னேஷ், அபி நட்சத்திரா என அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜின் கேமரா, கதை சொல்லும் வகையில் அழகாக காட்சி படுத்தியிருக்கிறது. சாம்.சி.எஸின் இசை அருமை. வன்முறை காட்சிகள் தூக்கலாக இருப்பது பார்வையாளர்களை சற்று உறுத்தினாலும், கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் போராட்டங்கள் அவற்றை மறக்கடித்து விடுகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, எளியவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் கதைக்களமாக வைத்துக்கொண்டு, சண்டைக்காட்சிகள் மூலமாகவே கதை சொல்லி, இயக்குநராக அசத்தியிருக்கிறார் அனல் அரசு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து