முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது: இ.பி.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்
EPS-1-2025-07-07

Source: provided

 கோவை : ''அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் நேற்று (ஜூலை 08) கோவையில் நடந்த நிகழ்ச்சியில் இ.பி.எஸ்., பேசியதாவது:  இந்தியாவிலேயே ஜனநாயகம் மிக்க ஒரு கட்சி என்றால் அது அ.தி.மு.க., தான்.  மக்களுக்கு சேவை செய்வதில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் உயர்ந்த இடத்திற்கு வரக் கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். நம்முடைய இயக்கத்தில் ஜாதி, மதத்திற்கு இடமே கிடையாது. அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகுகிறோம்.  

இன்றைக்கு நமது தலைவர்கள் எந்த வழியில் பின்பற்றினார்களோ, நாம் அனைவரும் அதே வழியில் பின்பற்றி, நடந்து கொண்டு இருக்கிறோம்.  பல்வேறு இன்னல்கள், இடர்பாடுகள், துன்பங்கள், துயரங்களை நமது தலைவர்கள் சந்தித்து வரலாறு படைத்து, அந்த கட்சியை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் கடினமாக உழைக்க வேண்டும்.  அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் ஆட்சி அமைவதற்கு, அத்தனை நல்ல உள்ளங்களும், அத்தனை நிர்வாகிகளும் ஒன்றுபட்டு உழைத்து வெற்றி காண்போம். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

முன்னதாக நேற்று காலை கோவை நகரில் நடை பயிற்சி மேற்கொண்ட இபிஎஸ், வழியில் தென்பட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். சிறு வியாபாரிகள், பொதுமக்களுடன் இயல்பாக பேசி கருத்துக்களை கேட்டறிந்தார். கோவை அ.தி.மு.க., அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இ.பி.எஸ். முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து