Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      ஆன்மிகம்
Nellaipar 2024-06-21

Source: provided

திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  

நெல்லையப்பர்  காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் சிவாய நமக, நமச்சிவாய கோஷங்கள் விண் அதிர தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தது. இதனை அடுத்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. தேர்த் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் 8000 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார் நாகேந்திரன், மாவட்ட கலெக்டர், மேயர் ராமகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து