Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Stalin 2021 11 29

சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்டும் பாராளுமன்றத்தில் பணிகள் நடை​பெறாது என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ​பிறகு, முதல்முறையாக பாராளுமன்றம் கூடுவ​தால், அந்த நடவடிக்கை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் எனத்தெரி​கிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18 காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து