எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 28 சிறுமிகளும் அடங்குவா்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கொர் கவுண்டி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில மாதங்கள் பெய்ய வேண்டி மழை, சில மணி நேரங்களில் பெய்ததால் 2 மணி நேரத்தில் குவாடலூப் நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென 33 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றில் இருந்து வெளியேறி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த தீடீர் வெள்ளத்தால் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொர் கவுண்டி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். அவா்களில் 28 சிறுவா்களும் அடங்குவா். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாக கூறினா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


