எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத்தொகை வைத்துள்ளதால், ஜூலை 10-ம் தேதி (நேற்று) முதல் அந்த சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்டது ன் இந்து சமய அறநிலையத் துறை. அந்த துறை பணத்தில் கல்லூரி கட்டுவதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். நீதிக்கட்சி வழியில் வந்த திராவிட இயக்கத்தின் வழியில் ஆட்சி செய்ததாக சொன்ன பழனிசாமி இப்படி பேசுவது, அவர் என்ன நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளார் என்பதைக் காட்டுகிறது. அவர் வெள்ளை வேட்டிக்குப் பதிலாக, காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார். கோவில் நிதி மட்டுமல்ல, எந்த வழியில் வந்த நிதியாக இருந்தாலும் அதை கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை என்று அமைச்சர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


