முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      இந்தியா
Bahavanth-maan 2023-06-01

Source: provided

புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பிரதமர் தனது விமானத்தில் பறக்கும்போது, ​​அவர் கீழே பார்த்து, ‘அது எந்த நாடு?’ என்று கேட்பார். அது எந்த நாடு என்பதைக் கூறுவார்கள். ​​‘கவலைப்பட வேண்டாம், நாம் செல்லும் இடத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்வோம்; இப்போது இங்கே தரையிறங்கலாம்’ என்று பிரதமர் கூறுவார். ஏனெனில், அவர் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்குவார். அப்படித்தான் அவர் பாகிஸ்தானிலும் தரையிறங்கினார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தார். நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, ஆனால், அவர் அங்கு தரையிறங்கலாம்!” என்று கிண்டலாகப் பேசினார்.

கடந்த 2015-ம் ஆண்டு, பிரதமர் மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்திக்க பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி பகவந்த் மான் இவ்வாறு பேசினார். 2015-ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொணட பிரதமர் மோடி, திரும்பும்போது ஆப்கானிஸ்தானுக்கும், பின்னர் ​​பாகிஸ்தானுக்கும் சென்றுவிட்டு நாடு திரும்பினார்.

இந்த வார தொடக்கத்திலும், ஒரு விழாவில் பேசும்போது பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து முதல்வர் பகவந்த் மான் இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு வெளியுறவு அமைச்சகம், பகவந்த் மான் பெயரைக் குறிப்பிடாமல், அந்தக் கருத்துகள் "பொறுப்பற்றவை மற்றும் வருந்தத்தக்கவை" என்று கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து