Idhayam Matrimony

கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால்  தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி  பேசினார்.

திண்டிவனத்தில் நேற்று இரவு நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, தேர்தல் வந்தால் தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின்.   கூட்டணியை நம்பி  தி.மு.க. உள்ளது. கூட்டணி இல்லை என்றால்  தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்.  

 எதிர்க் கட்சிகள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி இருந்தது. இம்மியளவும் குறை இல்லை.  தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே ஆட்சி,  தி.மு.க. ஆட்சிதான். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டுக்கு தூக்கத்தை தொலைத்து அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர்.  தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை.  4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, இப்போதாவது நீட் தேர்வு ரத்து ரகசியத்தை மக்களுக்கு உதயநிதி சொல்ல வேண்டும்.  2026-ல் தி.மு.க.அரசுக்கு  பை பை என மக்கள் சொல்ல தயாராகி விட்டனர்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து