Idhayam Matrimony

ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      இந்தியா
Modi 2024-12-04

அரியலூர்,  கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை, அரசு விழாவாக தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு இந்த விழாவை மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அன்றைய தினம் நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து